கேரளாவில் தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி ரூபாய் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

திருவனந்தபுரம்: கேரளாவில் தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி ரூபாய் லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உண்டு என்பதால் அதில் ஆர்வம் உள்ளவர்கள் லாட்டரி சீட்டுகள் வாங்குவது வழக்கம். அப்படித்தான் பனமரம் பகுதியை சேர்ந்த சைதல்வி கோழிக்கோட்டில் உள்ள நண்பரிடம் ஓணம் பம்பர் லாட்டரி வாங்க கூகுள் பே மூலம் பணம் அனுப்பி உள்ளார். அதற்கு காரணம் அவர் துபாயில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் உதவியாளராக உள்ளது தான்.

 நண்பரும் ஒரு லாட்டரி சீட்டை செலக்ட் செய்து அதை வாட்ஸ் அப்பில் சைதல்விக்கு அனுப்பி இருக்கிறார். நாட்கள் நகர்ந்தன.. லாட்டரி சீட்டு வாங்கியதை இருவரும் மறந்துவிட்டனர் என்று சொல்லலாம்.

நிலைமை இப்படி இருக்க நேற்று அந்த லாட்டரி சீட்டின் முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதை அவர் கவனிக்கவில்லை. சைதல்வியின் கட்டிடத்தில் பணியாற்றும் வேறு ஒரு நண்பர் அதை கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்.

அவ்வளவு தான்… மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த அவர் உடனே துபாயில் இருந்து நண்பரை சந்தித்து டிக்கெட்டை வாங்கி உள்ளார். கேரளாவில் தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரி பிடித்தம் போக அவருக்கு 7.56 கோடி பரிசு கிடைக்கும் என்பதால் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.