ஒரே சீருடை சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக அது பற்றிய தவறான கருத்துக்கள் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

ஒரே சீருடை சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக அது பற்றிய தவறான கருத்துக்கள் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஹிஜாப் விவகாரத்தில் இத்தகைய பிரச்சனை ஏற்பட ஒரு சிறு பிரிவினரின் பிற்போக்கு மனநிலையின் விளைவே காரணம் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் விளக்கம் அளித்துள்ளார். கர்நாடகாவில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஹிஜாப் ஆடை அணிந்துவர தடை விதிக்கப்பட்டது. பள்ளி சீருடை அணிந்துவர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் காவித்துண்டு அணிந்து வந்தனர். இது கர்நாடகாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளிம் கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சில பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ஹிஜாப் தொடர்பான சர்ச்சை முதல் ஒரே சீருடை சட்டம் பற்றிய தற்போதைய பேச்சுகள் வரையிலான பிரச்சினைகள் குறித்து தெரிவித்தார். அவர் பேசுகையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் பெண்களை மதத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதும் ஒரு பிரிவினரே ஹிஜாப் சர்ச்சையின் வேர்கள். ஹிஜாப் தொடர்பாக உருவாக்கப்பட்ட சர்ச்சை தேவையில்லாத ஒன்று. இதன் பின்னணியில் சதி உள்ளது. அந்த சதி என்னவெனில், புதிய தலைமுறை இந்தியர்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிறப்பாக செயல்படும் பல பெண்கள் உள்ளனர். இதில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளும் அடங்குவர். முன்பு முத்தலாக் தொடர வேண்டும் என்று விரும்பிய ஒரு சிறிய பிரிவினர் உள்ளனர். அந்தப் பிரிவினரே தற்போது முஸ்லிம் பெண்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சிறப்பாகச் செயல்படுவதை தடுக்க இத்தகைய சதிகளை செய்கின்றனர்.

Scroll to load tweet…

ஹிஜாப் சர்ச்சையின் மூலம், அந்த பிரிவு, பெண்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்வி பெறுவதை தடுப்பதில் உறுதியாக உள்ளது. மேலும் அவர்கள் ஹிஜாப் அணிந்த பிறகு படித்தாலும், அவர்களின் தொழில் வாய்ப்புகள் எதிர்மறையாக பாதிக்கப்படுகின்றன. அவர்கள் வீடுகளுக்குள் அடைக்கப்படுவர். இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். சமூகத்தின் மற்றும் நாட்டின் நிலைமையை மேம்படுத்த ஒரே ஒரு வழி உள்ளது. நல்ல கல்வி மற்றும் தேசத்தின் சேவைக்கு உங்கள் திறனைப் பயன்படுத்துவது. மேலும் ஒரே சீருடை சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக அது பற்றிய தவறான கருத்துக்கள் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.