kerala girl affier issue she murder the whole family
கள்ளக்காதலுக்காக, பெற்றோர்கள், மற்றும் பெற்ற குழந்தையையே கொடூரமாக பெண் ஒருவர் சோற்றில் விஷம் வைத்து கொலைசெய்துள்ள சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள முதல்வர், பினராயி விஜயனின் சொந்த ஊரான, தலச்சேரி பினராய் என்ற பகுதியை சேர்ந்த சவுமியா என்ற பெண் கணவர் மற்றும் ஐஸ்வர்யா என்ற மகளுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் சவுமியாவிற்க்கு அக்கம் பக்கத்தில் உள்ள சில வாலிபர்களுடன் கள்ள உறவு இருந்துள்ளது. எதற்சையாக ஒரு நாள் கையும் களவுமாக கணவரிடம் மாட்டினார். மேலும் இவரை கணவர் பல முறை கண்டித்தும் இவர் கணவரின் பேச்சை கேட்காமல் அவரிடம் சண்டை போட்டு கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் வந்துவிட்டார்.
கணவரை பிரிந்ததும் மிகவும் சுதந்திரமாக உணர்ந்த சவுமியா, பல வாலிபர்களுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். மேலும் இதை ஒருமுறை அவருடைய மகள் ஐஸ்வர்யா இவர் வேறு ஒரு வாலிபருடன் இருப்பதை பார்த்து விட்ட, சவுமியாவின் பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது. பெற்றோர் சவுமியாவை கண்டித்தது மட்டும் இன்றி இவரை வெளியில் போக அனுமதிக்க வில்லை.
இதனால் உச்ச கட்ட கோவத்தில், தன்னுடைய கள்ளகாதலுக்கு இடஞ்சலாக இருந்த குழந்தை ஐஸ்வர்யா, மற்றும் பெற்றோர்களுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்ய திட்டம் போட்டு அதனை சாமர்த்தியமாக நிறைவேற்றியுள்ளார் சவுமியா.
துளிர் விட்ட சந்தேகம்:
ஒரே நேரத்தில் சவுமியாவை தவிர்த்து குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்ததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இது குறித்து விசாரணை செய்ததில் தன்னுடைய மகள் மற்றும் பெற்றோர் இறந்ததற்கு காரணம்... தன் வீட்டில் இருந்த கிணற்றில் அமிலத்தன்மை இருந்தது தான் என சவுமியா கூறியுள்ளார்.
பின்னர் போலீசார் கிணற்றின் தண்ணீரை எடுத்து சோதனை செய்த போது இவர் கூறியது பொய் என தெரியவந்துள்ளது. அதே போல் சில கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், இவரிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில், கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால், பெற்றோர்களை மீன் குழம்பில் விஷம் வைத்தும், மகளுக்கு மீன் பொறியாலில் விஷம் வைத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் போலீசார்.
