Asianet News TamilAsianet News Tamil

மீன் வியாபாரிக்கு அடித்த யோகம்!! 2 மணிக்கு வங்கி கடன் நோட்டீஸ்,3.30 மணிக்கு லாட்டரி பரிசு

யோகம் சிலருக்கு முகத்தில் அறைந்தால் போல் வரும், சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் வரும், சிலருக்கு கொட்டோகொட்டென்று கொட்டும், ஆனால், சிலருக்கு மட்டும்தான் இக்கட்டான நேரத்தில் வந்து கை கொடுத்து தூக்கிவிட்டுச் செல்லும். 

Kerala fish vendor gets bank attachment notice at 2pm lottery win of 70lak at 3.30pm
Author
First Published Oct 14, 2022, 8:03 AM IST

யோகம் சிலருக்கு முகத்தில் அறைந்தால் போல் வரும், சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் வரும், சிலருக்கு கொட்டோகொட்டென்று கொட்டும், ஆனால், சிலருக்கு மட்டும்தான் இக்கட்டான நேரத்தில் வந்து கை கொடுத்து தூக்கிவிட்டுச் செல்லும். 

அந்த வகையில் கேரள மீன் வியாபாரிக்கு அடித்த யோகம் அவரை பெரும் சிக்கலில் இருந்து காத்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு ரூ.12 லட்சம் கடனை செலுத்தமுடியாமல் வங்கியிலிருந்து நோட்டீஸ் பெற்று கவலையில் இருந்த மீன் வியாபாரிக்கு மாலை 4 மணிக்கு லாட்டரியில் ரூ.70 லட்சம் பரிசு கிடைத்தால் எப்படி இருந்திருக்கும்!.

இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடங்கள்: மத்தியப்பிரதேசத்தில் அமித் ஷா அறிமுகம் செய்கிறார்

இந்த ஸ்வாரய்ஸ சம்பவம் குறித்த விவரம் வருமாறு

கொல்லம், மைநாகபள்ளி பழமூட்டில் பகுதியைச் சேர்ந்தவர் பூக்குஞ்சு(வயது 40) மோட்டார் சைக்கிளில் மீன் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்குமுன் சொந்தமாக வீடு கட்டுவதற்காக கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.7.45 லட்சத்தை பூக்குஞ்சு கடனாகப் பெற்றிருந்தார்.

அந்த கடனையும், வட்டியையும் செலுத்தாததால் அது ரூ.12 லட்சமாக அதிகரித்தது. இதையடுத்து, ரூ.12 லட்சத்தை செலுத்தக்கூறியும் செலுத்தத்தவறினால் வீட்டை ஜப்தி செய்து கடன் வசூலிக்கப்படும் என்று கடந்த 12ம் தேதி பூக்குஞ்சுக்கு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்திருந்தது.

சாப்பிடும்‘தட்டு’; தேங்காய் ‘ஸ்ட்ரா’! 5 தொழில்முனைவோர்களுக்கு மட்டும் பிரதமர் மோடி அழைப்பு

வங்கியிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு நோட்டீஸைப் பெற்ற பூக்குஞ்சு கவலையில் என்ன செய்வது எனத் தெரியாமல் அமர்ந்திருந்தார். அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் பூக்குஞ்சுவின் சகோதரர் செல்போனில் லைனில் வந்தார். அதை எடுத்துப் பேசிய பூக்குஞ்சுவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

பூக்குஞ்சு சமீபத்தில் வாங்கியிருந்த, அக்சயா லாட்டரி டிக்கெட்டில் அவருக்கு ரூ.70 லட்சம் பரிசு கிடைத்திருப்பதாக அவரின்சகோதரர் தெரிவித்தார். பூக்குஞ்சுவின் தந்தை யூசுப் குஞ்சு அடிக்கடி லாட்டரி வாங்குவார். ஆனால், பூக்குஞ்சு எப்போதாவது மட்டுமே லாட்டரி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். 

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு

அந்த வகையில் பழமூட்டில் பகுதியில் லாட்டரி விற்கும் கோபால பிள்ளை கடையில் பூக்குஞ்சு வாங்கிய லாட்டரிக்குத்தான் ரூ.70 லட்சம் பரிசு கிடைத்தது. இந்த லாட்டரி டிக்கெட் எண்ணை சரி செய்தபின் பூக்குஞ்சு மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார், உற்சாகத்தில் தனது மனைவி, குழந்தைகளிடம் கூறி ஆட்டம் போட்டதை மக்கள் வேடிக்கையாகப் பார்த்தனர்

Follow Us:
Download App:
  • android
  • ios