கேரளாவில் கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி ரிசல்ட் குலுக்கல் நடந்துள்ள நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் முதல் பரிசை தட்டித்தூக்கியுள்ளார். முழுமையான லாட்டரி ரிசல்ட்டை இங்கு பார்க்கலாம்.

கேரள லாட்டரி ரிசல்ட் 

நமது அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. முதல் ரூ.1 கோடி மற்றும் முதல் பரிசு ரூ.75 லட்சம் என மாறி மாறி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஓணம், கிறிஸ்தும்ஸ் நியூ இயர் மற்றும் விடுமுறை கால பம்பர் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுகின்றன.

அந்த வகையில் ரூ.20 கோடி முதல் பரிசு கொண்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.400 ஆகும். இதற்காக பல ஆயிரம் டிக்கெட்டுகள் அச்சடிக்கபப்ட்டு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று மதியம் 3 மணி அளவில் நடந்தது.

ரூ.20 கோடி பரிசு பெற்றவர் யார்?

முதல் பரிசான ரூ.20 கோடியை பெறப்போகும் அதிர்ஷ்டசாலி என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், ரூ.20 கோடி வென்ற வெற்றியாளர் யார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது கண்ணூர் அருகே உள்ள இரிட்டி பகுதியை சேர்ந்த சத்யன் என்பவர் தான் ரூ.20 கோடி முதல் பரிசை தட்டித் தூக்கியுள்ளார். அதாவது அவர் வாங்கிய XD 387132 (KANNUR)என்ற லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. 

சத்யன் மொத்தமாக 10 டிக்கெட்டுகள் வாங்கி இருக்கிறார். இதில் ஒரு டிக்கெட் அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்றை கொண்டு வந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் சக்கரக்கல் என்ற ஊரில் இந்த டிக்கெட்டை சத்யன் வாங்கி இருக்கிறார். முத்து ஏஜென்சி (Kannur C 3789) என்ற லாட்டரி ஏஜென்சியில் இந்த சீட்டு விற்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி பரிசு எண்கள் என்னென்ன?

இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த முத்து ஏஜென்சி உரிமையாளர் கடந்த 18 ஆண்டுகளாக லாட்டரி கடை நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமாக 6 கடை இருக்கும் நிலையில், இப்போது தான் அவரது கடைக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இதற்கு முன்பு ரூ.1 கோடி பரிசுத்தொகை பெற்ற லாட்டரி சீட்டும் அவரது கடையில் வாங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரியில் இரண்டாம் பரிசான ரூ.1 கோடி பரிசுத்தொகை பெற்ற 20 அதிர்ஷ்ட லாட்டரி நம்பர்கள் இதோ:‍ 

1) XG 209286, 2) XC 124583, 3) XK 524144, 4) XE 508599, 5) XH 589440, 6) XD 578394, 7) XK 289137, 8) XC 173582, 9) XB 325009, 10) XC 515987, 11) XD 370820, 12) XA 571412, 13) XL 386518, 14) XH 301330, 15) XD 566622, 16) XD 367274, 17) XH 340460, 18) XE 481212, 19) XD 239953, 20) XB 289525