Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் மீண்டும் மிரட்ட வருகிறது கனமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!

கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் மழை வெளுத்து வாங்கியது. 

Kerala Again heavy rains Alert
Author
Kerala, First Published Sep 24, 2018, 10:28 AM IST

கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பெரும் இயற்கை பேரழிவை அண்மையில் கேரளா சந்தித்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். Kerala Again heavy rains Alert

மாநிலத்தில், பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதந்தன. கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளா தற்போது முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் கேரளாவில், சில மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கைக்கான "யெல்லோ அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.  Kerala Again heavy rains Alert

குறிப்பாக பத்தினம் திட்டம், இடுக்கி, வயநாடு, திரிசூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. இந்த மழை 64.4 மில்லி மீட்டரில் இருந்து 124.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Kerala Again heavy rains Alert

இதேபோல் நாளை மறுநாள் பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில பேரிடர் மேலாண்மை துறை விழிப்புடன் இருக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios