உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி இங்கிலாந்திடம் தோற்றதற்கு காவி நிற ஜெர்சியே காரணம் என மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டித்தொடரில் தோல்வியே சந்திக்காமல் வந்த இந்திய அணி முதல் தோல்வி அடைந்தது. 27 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியை உலகக்கோப்பைப் போட்டியில் வீழ்த்தியுள்ளது இங்கிலாந்து அணி. 

இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு காரணங்களை கூறி விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இந்திய அணியின் தோல்வி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள்.

ஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சி தான்" என பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.