ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்‍கி சண்டை : தீவிரவாதி சுட்டுக்‍கொலை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்‍கும் இடையே இன்று காலை கடும் துப்பாக்‍கிச் சண்டை நடைபெற்றது. இதில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய முக்‍கிய தீவிரவாதி சுட்டுக்‍கொல்லப்பட்டான். 

ஜம்மு காஷ்மீரையொட்டிய இந்திய எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தொடர்ந்து ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களுக்‍கு எதிரான நடவடிக்‍கைகளை ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்று ​அதிகாலை பத்காம் மாவட்டத்தில் உள்ள மச்சூ என்ற பகுதியில் தீவிரவாதிகள் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்‍குதல் நடத்தியதால், பதிலுக்‍கு ராணுவத்தினரும்  தீவிர தாக்‍குதல் நடத்தினர்.

இந்த தாக்‍குதலில் முசாஃபர் அகமது என்ற தீவிரவாதி சுட்டுக்‍கொல்லப்பட்டான். அவன், லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய அல்பதர் என்ற இயக்‍கத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது.