Asianet News TamilAsianet News Tamil

இந்த ஒரு விஷயத்துல இருந்தே தெரியலயா அது பொய் வழக்குனு.. அப்பாவின் கைதுக்கு பிறகும் கெத்தா பேசிய கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ, வீடு புகுந்து அதிரடியாக கைது செய்துள்ளது. 
 

karti chidambaram speaks after his father p chidambaram arrest in inx media scam case
Author
Chennai, First Published Aug 21, 2019, 11:20 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ, வீடு புகுந்து அதிரடியாக கைது செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கை சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்திவரும் நிலையில், சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ தீவிரம் காட்டியது. இதையடுத்து ப.சிதம்பரம், முன் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்காத நிலையில், சிதம்பரத்தின் டெல்லி இல்லத்தில் அவரை அதிரடியாக கைது செய்தது சிபிஐ. 

karti chidambaram speaks after his father p chidambaram arrest in inx media scam case
 
சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2008ல் இந்த சம்பவம் நடந்ததாக கூறி, 9 ஆண்டுகள் கழித்து 2017ல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதுதொடர்பாக என் வீட்டில் 4 முறை ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் 4 முறை ரெய்டு நடத்தப்பட்டதேயில்லை. என் வீட்டில் நடத்தியதுதான் முதன்முறை. 

இந்த வழக்கில் எனக்கு 20 முறை சம்மன் அனுப்பினர். ஒவ்வொரு முறையும் நான் ஆஜராகியிருக்கிறேன். ஒவ்வொரு முறை ஆஜராகும்போது 10 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஆனாலும் சார்ஜ் ஷீட் பதிவு செய்யவேயில்லை. இது பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று இதிலிருந்தே தெரியவில்லையா? என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். 

karti chidambaram speaks after his father p chidambaram arrest in inx media scam case

மேலும் சிதம்பரம் தலைமறைவாகியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், என் தந்தை தலைமறைவெல்லாம் ஆகவில்லை. ஒரு தனிமனிதன் எங்கிருக்கிறார் என்பதையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று பதிலளித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios