Asianet News TamilAsianet News Tamil

கரண்ட் பில் கட்ட மாட்டோம்.. காங்கிரஸ் வாக்குறுதி என்னாச்சு.! மின்வாரிய ஊழியரிடம் வம்புக்கு போன கிராமத்தினர்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றதை அடுத்து,  மின் கட்டணம் செலுத்தமாட்டோம் என்று மின்சார ஊழியரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Karnataka villagers' refuse to pay electricity bill video goes viral
Author
First Published May 16, 2023, 11:55 AM IST

200 யூனிட்கள் இலவசமாக தருவதாக தேர்தலுக்கு முந்தைய காங்கிரஸின் வாக்குறுதியை காரணம் காட்டி திங்கள்கிழமை இந்த மாவட்டத்தில் உள்ள கிராமவாசிகள் சிலர் மின்கட்டணத்தை செலுத்த மறுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் முதல் நாள் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த 'உத்தரவாதங்களுக்கு' ஒப்புதல் முத்திரை அளிப்பதாக காங்கிரஸ் பலமுறை கூறியது. அது என்னவென்றால் 200 யூனிட்கள் இலவச மின்சாரம் தருகிறோம் என்ற அறிவிப்பும் இதில் அடங்கும்.

Karnataka villagers' refuse to pay electricity bill video goes viral

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், மக்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்கள். பில் கலெக்டர் அவர்களிடம், "நீங்கள் இந்த மாதம் பில் கட்ட வேண்டும்.” என்று கூற, “நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம். அவர்கள் (காங்கிரஸ்) மின்சாரம் இலவசம், இலவசம் மட்டுமே என்று சொன்னார்கள்” என்று பதில் அளித்தார்.

இலவச மின்சாரம் தருவதாக அரசு சொன்னால், மின் துறையும் அதை பின்பற்றும் என்று அவர்களிடம் கூறினார் அந்த அரசு ஊழியர். மற்றொரு கிராமவாசி, "நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) வசூலிக்கிறீர்கள், எங்களிடம் அல்ல. நாங்கள் கட்டணம் செலுத்த மாட்டோம்," என்று கிராமவாசி கூறி, அங்கு அமர்ந்திருக்கும் மற்றவர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..ஜூலை 1 முதல் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை நிறுத்தம்.. யார் யாருக்கு பொருந்தும்?

இதையும் படிங்க..டெல்லி விரையும் டி.கே.சிவக்குமார்.. தலைமைக்கு தூதுவிட்ட சித்தராமையா - அடுத்த கர்நாடக முதல்வர் யார்?

Follow Us:
Download App:
  • android
  • ios