கர்நாடகவில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கர்நாடகம் மாநிலம் முதால் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரின் முர்கேஷ் நிரானிக்கு சொந்தமான சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இயங்கி வந்த கொதிகலன் இன்று காலை வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கொதிகலன் வெடித்து சிதறியதில் சர்க்கரை ஆலையின் பல்வேறு சுவர்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.