Asianet News TamilAsianet News Tamil

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது... சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மனு நிராகரிப்பு..!

கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சார்பில் முகுல் ரோத்தகி வைத்த முறையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.

Karnataka political crisis...supreme court
Author
Delhi, First Published Jul 22, 2019, 11:17 AM IST

கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சார்பில் முகுல் ரோத்தகி வைத்த முறையீட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். Karnataka political crisis...supreme court

கர்நாடகாவில் காங்கிரஸ்- மஜத கூட்டணியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில் அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் திரும்ப பெற்றுள்ளனர். Karnataka political crisis...supreme court

இதனால், முதல்வர் குமாரசாமி அரசு பெருபான்மையை இழந்ததால் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என எடியூரப்பா தொடர்ந்து வலியுறுத்திவந்தார். அதேபோல், ஆளுநர் 2 முறை உத்தரவிட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் ரமேஷ்குமார் நிராகரித்தார். மேலும், சட்டப்பேரவையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். Karnataka political crisis...supreme court

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை நடத்த உத்தரவிடக்கோரி 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவசர வழக்காக இன்று அதை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உடனடியாக, நாளை விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பார்க்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios