கர்நாடகாவில் தனியார் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டு ஒத்திவைப்பு! கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பல்டி!

மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, 50 சதவீத நிர்வாகப் பதவிகளுக்கும், 75 சதவீத நிர்வாகமற்ற பதவிகளுக்கும் கன்னடர்களை நியமிக்க வழிவகை செய்கிறது. இந்த முடிவு தொழில்துறையினரிடம் இருந்து கடும் எதிர்ப்பைப் பெற்றுள்ளது.

Karnataka pauses private jobs quota-for-locals bill after huge backlash sgb

தனியார் துறையில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதைக் கட்டாயமாக்கும் மசோதாவுக்கு சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தது. அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் அதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா, 50 சதவீத நிர்வாகப் பதவிகளுக்கும், 75 சதவீத நிர்வாகமற்ற பதவிகளுக்கும் கன்னடர்களை நியமிக்க வழிவகை செய்கிறது. இந்த முடிவு தொழில்துறையினரிடம் இருந்து கடும் எதிர்ப்பைப் பெற்றுள்ளது.

சர்ச்சையைக் ஏற்படுத்தி இருக்கும் இந்த மசோதா வியாழக்கிழமை கர்நாடக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த முடிவை அறிவித்து, முதல்வர் சித்தராமையா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். "கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்குவதைக் கட்டாயமாக்குவதற்கான மசோதாவுக்கு மாநில அமைச்சரவை திங்களன்று ஒப்புதல் அளித்தது"  என அவர் தெரிவித்திருந்தார்.

மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வரப்பிரசாதம்! வருமான வரியை சேமிக்க முத்தான வழிகள்!

அவரது பதிவை அடுத்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த பதிவை சித்தராமையா நீக்கிவிட்டார். ஆனால், மசோதாவின் வரைவில் குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கான 100 சதவீத இடஒதுக்கீடு பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

“கன்னட மண்ணில் கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படக் கூடாது. அவர்கள் தாய்மண்ணிலேயே மகிழ்ச்சியாக வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே எங்கள் அரசின் விருப்பம்” என்றும் சித்தராமையா தனது பதிவில், கூறியிருந்தார். தனது அரசு கன்னடர்கள் நலனில் அக்கறை கொண்ட, அதற்கு முன்னுரிமை அளிக்கும் அரசு என்றும் சித்தராமையா கூறினார்.

இந்த அறிவிப்பு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, தொழில்துறையினருடன் கலந்தாலோசித்து கவலைகளை நிவர்த்தி செய்வதாக மாநில அரசு வலியுறுத்தியது.

"தொழிலாளர் துறை இன்னும் மசோதாவைப் பற்றி சம்பந்தபட்ட துறையினருடன் கலந்தாலோசிக்கவில்லை. மசோதாவைக் கொண்டுவருவதற்கு முன், நிச்சயமாக உரிய ஆலோசனைகள் பெறப்படும். மிக முக்கியமாக, தொழில்துறையினருடன் விரிவான ஆலோசனை கேட்கப்படும். எனவே யாரும் பீதி அடையத் தேவையில்லை" என்று அமைச்சர் பிரியங்க் கார்கே கூறினார்.

இந்தியன் 2 நெகட்டிவ் கமெண்ட்களுக்கு போல்டான பதில் கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசன்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios