கர்நாடகாவில் ஒரே குடும்பதைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள தட்டாஹள்ளியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (36). நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா (65), அம்மா ஹேமலதா, மனைவி நிகிதா (28), மகன் ஆர்ய கிருஷ்ணா (4) கடந்த சில மாதங்களாக ஓம் பிரகாஷூக்கு தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

 

இந்நிலையில் மைசூரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் ஓம் பிரகாஷ் வந்திருந்தார். அங்கு தங்கியிருந்த அவர், நேற்று இரவு தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு, பின்னர், தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

இது தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.