கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதன் மூலம் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் கை ஓங்குகிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அமோகமான வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களை தக்கவைக்கிறது. மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் மாநிலங்களவையில் கட்சியின் பலத்தை ஐந்தில் இருந்து ஏழாக உயர்த்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜேடிஎஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. தேவகவுடாவின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் முடிவடையும்போது, அந்தக் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர்கூட இ்ல்லை என்ற நிலை வந்துவிடும். 2024ல் ஓய்வுபெறும் நால்வர் பட்டியலில் பாஜக தனது ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும். ஆனால் 2026ஆம் ஆண்டுக்குள் அக்கட்சியின் பலம் குறைந்துவிடும்.
மாநிலங்களவையில் 92 உறுப்பினர்களை வைத்திருக்கும் பாஜகவுக்கு கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வி மேல்சபையில் பாஜகவின் ஒட்டுமொத்த நிலையை கணிசமாக மாற்றாது. இருப்பினும் ராஜ்ய சபாவில் பெரும்பான்மையை பெற வேண்டும் என்ற பாஜகவின் இலக்கை எட்டுவதில் சிக்கல் ஏற்படுத்தும்.
மணிப்பூரில் வன்முறையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்வு; டெல்லிக்கு விரைந்த முதல்வர் பைரன் சிங்
அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் நான்கு ஆர்எஸ் உறுப்பினர்களில் பாஜக எம்பியும் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் மற்றும் மூன்று காங்கிரஸ் எம்பிக்கள் - எல் ஹனுமந்தையா, சையத் நசீர் உசேன் மற்றும் ஜி சி சந்திரசேகர் ஆகியோர் அடங்குவர். கர்நாடகாவில் இருந்து தலா நான்கு ஆர்எஸ் உறுப்பினர்கள் 2026 மற்றும் 2028 இல் ஓய்வு பெறுவார்கள்.
தற்போது, மாநிலங்களவையில் ஆறு இடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் 239 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பாஜக 92 எம்.பி.க்களுடன் மிகப்பெரிய கட்சியாக உள்ளது, அதைத் தொடர்ந்து காங்கிரஸ் (31), டிஎம்சி (13), திமுக மற்றும் ஆம் ஆத்மி தலா 10 உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன.
பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலா 9 உறுப்பினர்களையும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 7 உறுப்பினர்களையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 6 உறுப்பினர்களையும் பெற்றிருக்கின்றன.
புதுச்சேரியில் தொழிலதிபருக்கு கரப்பான் பூச்சி பிரியாணி பரிமாறிய பிரபல உணவகம்!

உறுப்பினர்களின் ஓய்வு காரணமாக 10 இடங்கள் காலியாக இருந்தாலும், மாநிலங்களவையின் ஒட்டுமொத்த அமைப்பு இந்த ஆண்டு மாறாது என ராஜ்யசபா புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த ஆண்டு, கோவாவில் ஜூலையில் ஒரு இடமும், ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் முறையே ஆறு மற்றும் மூன்று இடங்களும் காலியாகின்றன.
2024 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் (அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக) 56 இடங்களுக்கு தேர்தல் நடக்கும்போதுதான், குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
டி.கே. சிவகுமாருக்கு பிறந்தநாள்... பரிசாக முதல்வர் பதவியை வழங்குமா காங்கிரஸ்?
