கர்நாடகாவில் பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் சிக்மகளூர் நகர பாஜக செயலாளராக இருந்தவர் முகமது அன்வர். இவர் இன்று காலை கவுரி கலுவ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், அன்வரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் அன்வர் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அன்வர் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது சொந்த பகையா? வேறு ஏதேனும் காரணங்களா? என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலை நிகழ்ந்த இடத்தில் ஏதேனும் சிசிடிவி கேமரா இருக்கிறதா என்பதையும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். பாஜக பிரமுகரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.