Asianet News TamilAsianet News Tamil

90s Kids Bachelors Yatra: எங்களுக்கு கல்யாணம் எப்போது? பாத யாத்திரை புறப்படும் 90s கிட்ஸ்!

கர்நாடகாவில் திருமணம் ஆகாத இளைஞர்கள் விரைவில் தங்களுக்குப் பெண் கிடைக்க வேண்டி பாத யாத்திரையாக சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் செல்ல உள்ளனர்.

Karnataka Bachelors found a unique solution to their bride crisis
Author
First Published Feb 12, 2023, 1:34 PM IST

கர்நாடக மாநிலத்தில் திருமணம் ஆகாத சுமார் 200 இளைஞர்கள் ‘பிரம்மச்சாரிகள் பாத யாத்திரை’ என்ற பெயரில் நடைபயணத்தைத் தொடங்கயுள்ளனர்.

90s கிட்ஸ் என்று சொல்லிக்கொள்ளும் பலர் முப்பது வயதுக்கு மேல் ஆகியும் தங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். தங்களைக் கல்யாணம் செய்துகொள்ளும் பெண் யாரும் இல்லாத குறையைப் போக்கிக்கொள்ளும் நம்பிக்கையில் பாத யாத்திரை செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் இருந்து 105 கி.மீ தொலைவில் உள்ள சாமூண்டீஸ்வரி கோவிலுக்கு திருமணம் ஆகாத இளைஞர்கள் சுமார் 200 பேர் பாத யாத்திரையாகச் செல்ல இருக்கின்றனர்.

Modi Jacket: பிரதமரின் பிளாஸ்டிக் ஜாக்கெட்டை வடிவமைத்த தமிழக இளைஞர்

மூன்று நாட்களுக்கு நடக்க உள்ள இந்தப் பாத யாத்திரைக்கு ‘பிரம்மச்சாரிகள் பாதயாத்திரை’ என்று குறிப்பிடுகின்றனர். மாத்தூர் தாலுக்காவில் உள்ள கேஎம் டோட்டி என்ற கிராமத்தில் 23ஆம் தேதி பாத யாத்திரை தொடங்கும்.

யாத்திரை பற்றி அறிவிப்பு வெளியாகி 10 நாட்களில் 100 இளைஞர்கள் பதிவு செய்துவிட்டனர். இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளும் அனைத்து இளைஞர்களுக்கும் 3 நாட்களும் மூன்று வேளை உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளன.

“உரிய வயதில் திருமணம் ஆகாததால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பேரணியை நடத்துகின்றோம். போன வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்தலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் அப்போது முடியவில்லை” என்று இந்த யாத்திரைக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான ஷ்வ் பிரசாத் கூறுகிறார்.

Viral Video: திருமணக் கோலத்தில் பரீட்சைக்கு வந்த கேரளப் பெண்! லைக்ஸ் அள்ளும் வைரல் வீடியோ!

Follow Us:
Download App:
  • android
  • ios