Asianet News TamilAsianet News Tamil

Karnataka Election 2023: காங்கிரஸ் 2வது பட்டியலிலும் முன்னாள் முதல்வர் சித்தராமையா பெயர் மிஸ்ஸிங்!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பெயர் இந்தப் பட்டியலிலும் இடம் பெறவில்லை.
 

Karnataka assembly election 2023: Congress released 2nd list of 42 candidates name
Author
First Published Apr 6, 2023, 11:33 AM IST | Last Updated Apr 6, 2023, 5:33 PM IST

சித்தராமையாவுக்கு ஏற்கனவே வருணா தொகுதியில் டிக்கெட் கிடைத்திருந்தாலும், கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். கோலார் தொகுதியில் சித்தராமையாவின் வேட்புமனு குறித்து சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.

சித்தராமையா இரு தொகுதிகளிலும் போட்டியிட்டால் இரண்டிலும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கோலார் தொகுதி பாஜக வேட்பாளர் வர்தூர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

வரும் மே 10 ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 124 வேட்பாளர்களின் பட்டியலை ஏற்கனவே காங்கிரஸ் வெளியிட்டு இருந்தது. கனகபுரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் டிகே சிவகுமார் போட்டியிடுகிறார். மல்லிகார்ஜூனே கார்கே மகன் பிரியங் கார்கே சிதாபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். எம்பி பாட்டீல் பாபலேஸ்வர் தொகுதியிலும், தினேஷ் குண்டுராவ் காந்திநகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தற்போது எம்எல்ஏவாக இருக்கும் வேங்கடரமணப்பாவுக்கு இந்த முறை காங்கிரஸ் சீட் வழங்கவில்லை.

Karnataka assembly election 2023: Congress released 2nd list of 42 candidates name

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios