Asianet News TamilAsianet News Tamil

கேரள மக்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! 600 சதுர அடியில்...250 வீடு கட்டி தர முன்வந்த பிரபலம் யார் தெரியுமா..?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டகேரளாவில் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல  நிறுவனங்கள் உதவி கரம் நீட்டி வரும் நிலையில் தற்போது பிரபல ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி தர முன்வந்துள்ளது.

joy alukkas announced  a happy new project for kerala flood affected people
Author
Kerala, First Published Sep 15, 2018, 7:31 PM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டகேரளாவில் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல  நிறுவனங்கள் உதவி கரம் நீட்டி வரும் நிலையில் தற்போது பிரபல ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டி தர முன்வந்துள்ளது.
 
கேரள வெள்ள பாதிப்பின்போது, பல்வேறு தரப்பினர், பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டினர். இந்த நிலையில், ஜோய் ஆலுக்காஸ் நிறுவனமும் முன் வந்துள்ளது.அதன் படி, 250 வீடுகள் கட்டிக் கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கென 15 கோடி ரூபாயை அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு வீடுகளும், 600 சதுர அடியில், 6 லட்சம் மதிப்பில் 250 வீடுகளைக் கட்ட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

joy alukkas announced  a happy new project for kerala flood affected people

இந்த திட்டத்துக்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், நல்லெண்ணம் கொண்ட பலரும் உதவிகள் செய்துள்ளனர். இந்த திட்டத்திற்காக உதவி செய்பவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் இயக்குநர் கூறியுள்ளார்.

joy alukkas announced  a happy new project for kerala flood affected people

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தங்கள் வீடுகளை இழந்தவர்கள், தங்களது விண்ணப்பங்களை ஜோய் ஆலுக்காஷ் குழுமத்தின் அருகில் உள்ள விற்பனை நிலையத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள், ஜோய் ஆலுக்காய் அறக்கட்டளையால் அமைக்கப்பட்டுள்ள குழுவினர், அரசு உதவியுடன் ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

joy alukkas announced  a happy new project for kerala flood affected peopleதற்போது, ஜோய் ஆலுக்காஷின் இந்த திட்டம் குறித்து கேரள அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளதாகவும், அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், திட்டத்துக்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் எதிர்பாராத இந்த அறிவிப்பால், கேரள மக்கள் நிம்மதி முச்சு விட்டுள்ளனர்.மேலும் இந்த நிறுவனத்திற்கு மக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios