சிவில் சர்வீஸ் தேர்வில் தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தகவலில் பிழை ஏற்பட்டு விட்டது என அந்த மாணவி தெரிவித்து உள்ளார். 

சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொண்டு முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றதாக கூறி மாவட்ட நிர்வாகம், மத்திய நிலக்கரிச் சுரங்கம் லிமிடெட் மற்றும் ஊடகத்திடம் மன்னிப்பு கோரி இருக்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று விட்டதாக கூறிய நிலையில், தான் தேர்ச்சி பெறவில்லை என தெரிவித்து இருக்கிறார். தான் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தகவலில் பிழை ஏற்பட்டு விட்டது என அந்த மாணவி தெரிவித்து உள்ளார்.

திவ்யா பாண்டே (24) மற்றும் அவரது குடும்பத்தார் சார்பில் மன்னிப்பு கோரிய நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்னிந்தியாவை சேர்ந்த திவ்யா பி என்ற மாணவிக்கு பதிலாக திவ்யா பாண்டே தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் 323-வது இடத்தை பிடித்ததாக கூறப்பட்டது. 

தேர்வு முடிவு:

இதுகுறித்து திவ்யா பாண்டேவின் சகோதரி பிரியதர்ஷினி பாண்டே கூறும் போது, “எனது சகோதரி தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் 323 ரேன்க் பெற்றதாக உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது தோழி தெரிவித்தார், நாங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முயற்சித்தோம், ஆனால் இண்டர்நெட் வேலை செய்யவில்லை. தெரியாத் தனமாக இந்த பிழை ஏற்பட்டு விட்டது,” என தெரிவித்தார். 

தேர்ச்சி பெற்றதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் வசதி மற்றும் முறையான பயிற்சி இன்றி முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் திவ்யா பாண்டே தேர்ச்சி பெற்றார் என ஊடகங்களில் தகவல் வெளியானது. இதை அடுத்து மத்திய நிலக்கரி சுரங்கம் லிமிடெட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான பி.எம். பிரசாத் மற்றும் மூத்த அதிகாரிகள் திவ்யா பாண்டேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இது மட்டும் இன்றி ராம்கர் பகுதிக்கான துணை ஆணையர், மாதவி மிஸ்ராவும் திவ்யா பாண்டேவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக திவ்யா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என ராம்கர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.