BREAKING: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ சென்னையில் காலமானார்.. இது தான் காரணம்..!

ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அமைந்தகரையில்  தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

Jharkhand education minister Jagarnath Mahto passes away

ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 

ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை அமைந்தகரையில்  தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டு . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேரில் வந்து நலம் விசாரித்து சென்றார். 

இதையும் படிங்க;- இந்தியாவில் மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த கொரோனா! பாதிப்பு புதிய உச்சம்! தமிழகத்தில் பாதிப்பு நிலவரம் என்ன?

Jharkhand education minister Jagarnath Mahto passes away

இந்நிலையில், ஜகர்நாத் மஹ்தோவுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று  மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க;-  Gym Trainer Death: அடுத்த அதிர்ச்சி.. இளம் ஜிம் பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழப்பு..!

Jharkhand education minister Jagarnath Mahto passes away

இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் டுவிட்டர் பக்கதத்தில் நம்ம புலி ஜாகர்நாத் இனி இல்லை என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios