எம்எல்ஏ பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம்… அறிவித்தது தேர்தல் ஆணையம்!!
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரித் துறையைத் தன்வசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில், தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், தன் பெயரிலேயே சுரங்கங்களை ஒதுக்கிக் கொண்டார் என்று ஹேமந்த் சோரன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற பாஜக, ஹேமந்த் சோரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் கீழ்வரும் பிரிவு 9A யை மீறிவிட்டார்.
இதையும் படிங்க: காலியாகிறதா காங்கிரஸ் கூடாரம்! வெளியேறிய 7-வது பெரிய தலைவர் குலாம் நபி ஆசாத்: இதுவரை எத்தனை பேர்?
இந்த விவகாரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கிறது. எனவே, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது. அதன் அடிப்படையில், ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரணையும், சோதனைகளையும் நடத்திய தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யலாம் என்ற பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜ்பவனில் இருந்து முறையான அறிவிப்பு வெளியான பின்னர் இவர் தனது எம்எல்ஏ மற்றும் முதல்வர் பதவியை இழப்பார்.
இதையும் படிங்க: புதிய கட்சியா? பாஜகவில் சேர்வாரா குலாம் நபி ஆசாத்? வலைவிரிப்பு தொடங்கியது
இவரே முன் வந்து ராஜினாமா செய்ய வேண்டும். ஆறு மாதத்திற்குப் பின்னர் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு, முதல்வர் ஆவதற்கான வாய்ப்புள் ஹேமந்த் சோரனுக்கு இருக்கிறது. அதுவரை இவர் தனது கட்சி எம்எல்ஏக்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை. 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு 49 எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால், ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பு மிகக் குறைவ என்றும் ஹேமந்த் சோரன் பதவி போனாலும், 48 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், பெரும்பான்மைக்கு 42 எம்எல்ஏக்கள் மட்டும்தான் தேவை. ஆதலால் ஆட்சி கவிழ்வதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.