ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது; 6 மணிநேர விசாரணைக்குப் பின் அமலாக்கத்துறை அதிரடி

அமலாக்கதுறை நடத்திய 8 மணிநேர விசாரணைக்குப் பிறகு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jharkhand CM Hemant Soren Arrested in Land Scam Case sgb

ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய 6 மணிநேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நில மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கைதாவதை முன்னிட்டு ஜார்க்கண்ட மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். ஆளுநர் ராதாகிருஷ்ணனும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அந்த மாநிலத்தில் தற்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் சம்பாய் சோரன் அடுத்த முதல்வராகப் பதவியேற்ற இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐபோன் உற்பத்திக்கு ஏற்ற இடம் இந்தியாதான்! சீனாவை காலி செய்யும் அதிரடி திட்டம்!

ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவரது மனைவி கல்பனா சோரன் முதல்வராகப் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்போது அவருக்குப் பதிலாக சம்பாய் சோரன் புதிய முதல்வராகத் தேர்வாகியுள்ளார்.

"நாங்கள் எங்கள் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளோம்... எங்கள் அடுத்த முதலமைச்சர் சம்பாய் சோரன்..." என அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர் 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios