ஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஜார்கண்ட் மாநிலம் கர்வா பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து. சாலையில் தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். பின்னர், சாலையில் இருந்து விலகி, ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்நதனர். விபத்து தொடர்பாக மீட்பு படையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இத தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் கடந்த 10-ம் தேதி பாட்னா நோக்கி சென்ற இரும்பு லோடு ஏற்றி சென்ற லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.