Jewelry shop Owner who lived a day in prison
வீடு வாங்கணும், கார் வாங்கணும், நகை வாங்கணும், நிலம் வாங்கணும் என நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசைகள் உண்டு. அதுபோன்ற ஆசைகளை அவரவர்கள் தங்களது வசதிக்கேற்ப பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால், கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவருக்கு வித்தியாசமான ஒரு ஆசை எழுந்துள்ளது. அப்படி என்ன அவரோட ஆசைன்னு சொன்னா... ஒரு நாள் சிறை வாழ்க்கை வாழணுமாம்.
இதுதாங்க அவரோடு ஆசை. அதையும் அவர் பூர்த்தி செஞ்சிட்டாரு. எப்படி தெரியுமா... தொடர்ந்து படிச்சு பாருங்க.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாபி செம்மனூர். இவருக்கு தென்னிந்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான நகைக்கடைகள் உள்ளது. நகைக்கடை அதிபரான பாபி செம்மனூர் தனது விருப்பங்களை அனைத்தையும் பூர்த்தி செய்து வந்தார். ஆனாலும் அவருக்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருந்தது. சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அனபவப்பூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது வினோதமான
ஆசையாக இருந்தது. இந்த ஆசையைப் நிறைவேற்றவும் அவர் விரும்பினார். பாபி செம்மனூருக்கு, கேரள போலீஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பு இருந்தது. தனது ஆசை குறித்து, அவர்களிடம் கூறியுள்ளார்.

நகைக்கடை அதிபரின் இந்த ஆசை போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் வியப்பைத் தந்தது. ஆனாலும், குற்றமிழைக்காத யாரையும் சிறையில் அடைக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதை போலீசார் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் அவரது விருப்பதை நிறைவேற்ற முடியாது என்றும் போலீசார் கூறியுள்ளனர். போலீசாரின் இந்த பாபி செம்மனூர் ஏமாற்றம் அடைந்தாலும், தனது ஆசையை மட்டும் அவர் கைவிடவில்லை. ஆனாலும் சிறை
வாழ்க்கை என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவரது ஆசையை நிறைவேற்றும் செய்தி ஒன்று அவருக்கு வந்துள்ளது. தெலங்கான மாநிலம் சங்கரரெட்டி மாவட்டத்தில் 1796 ஆம் ஆண்டு நிஜாம் மன்னர் காலத்தில் செயல்பட்ட ஒரு சிறை தற்போது சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த சிறையில் ரூ.500 பணம் செலுத்தினால் ஒரு நாள் சிறை வாழ்க்கையை வாழும் திட்டம் நடைமுறையில் இருப்பதும் அவருக்கு தெரியவந்தது. 2012 ஆம் ஆண்டு புதிய சிறை
அங்கு கட்டப்பட்டதைத் தொடர்ந்து நிஜாம் மன்னர் கால சிறை இதுபோல் மாற்றப்பட்டு இருந்தது.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன், பாபி செம்மனுர், தனது நண்பர்கள் ஆசிர் அலி, யோகா ஆசிரியர் பிரசாந்த் மற்றும் வினோய் ஆகியோருடன் தெலங்கானாவில் உள்ள சிறைக்கு சென்றார். அங்கு அதிகாரிகளைச் சந்தித்து, தனது நோக்கத்தை கூறியுள்ளார். அதன்படி, போலீசார், பாபி செம்மனூரிடம் ரூ.500 கட்டணமாக வசூலித்தனர்.
அவர்களிடம், சிறையில் கைதிகள் கடைப்பிடிக்கும் நிபந்தனைகளை அவர்களும் கடைப்பிடக்க வேண்டும் என்றும், சிறையில் வழங்கும் உணவு வகைகள், உடைகளையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். மேலும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் அவர்களுக்கு விதிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட அவர்கள் ஒரு நாள் கைதியாக சிறை வாசத்தை அனுபவித்தனர்.
தனது ஒரு நாள் சிறை அனுபவம் குறித்து நகைக்கடை அதிபர் பாபி செம்மனூர் கூறும்போது, என்னிடம் பணம் இருந்தாலும் சிறை வாழ்க்கையை அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவாற்ற முடியாமலேயே இருந்தது. சங்கரரெட்டி நிஜாம் மன்னர் சிறையில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததும் அதை தவறாமல் பயன்படுத்திக் கொண்டேன் என்றார்
கைதிகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளுடன் ஒரு நாள் சிறை வாழ்க்கையை அனுபவித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று அவர் புளங்காகிதத்துடன் விவரித்தார் பாபி செம்மனூர்.
