கடந்த செப் 22 அன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா விரைவாக உடல் நலம்தேறி வந்த நிலையில் நேற்று மாலை திடீரென மாரபடைப்பால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.

முதல்வர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. நேற்று கவர்னர் நேரில்வந்து பார்த்து முதல்வர் உடல் நிலையை கேட்டறிந்து உள்துறை அமைச்சருக்கு அறிக்கை அளித்தார். 

 மத்திய சுகாதார அமைச்சர் நட்டா தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளதாக கூறினார். முதல்வர் உடல் நலம் குறித்து கேட்டறிந்த அவர் இது குறித்து பிரதமரிடம் நேரில் விளக்கியுள்ளார். 

முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் விரைவில் குணமடைவார் என்று பிரதமரிடம் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா விளக்கி கூறியுள்ளார். 

இது தவிர அப்போலோ மருத்துவர்களுக்கு உதவ , சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் 4 பேர் கொண்ட குழுவை அனுப்பி உள்ளார். முதல்வர் விரைவாக குணமடைந்து வருவதாக மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.