ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் நடனமாடியுள்ளது வைரலாகி வருகிறது
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலக முழுவதும் வெளியானது. அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் காவாலா பாடல், கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகை தமன்னா நடனம் ஆடியுள்ள இப்பாடல் இணையத்தில் ட்ரெண்டானது. இந்த பாட்டிற்கு ஜானி மாஸ்டர் நடன காட்சிகளை வடிவமைத்திருந்தார். சிறுவர் முதல் பெரியவர் வரை விருப்பத்திற்குரிய பாடலாக இது இருக்கிறது.
குறிப்பாக, தமன்னாவின் ஹூக் ஸ்டெப் இந்த பாடலை மேலும் வைரலாக்கியது. இணையதளத்தில் இன்று வரை வைரலாகி வரும் தமன்னாவின் ஹூக் ஸ்டெப்பை சின்னத்திரை நட்சத்திரங்கள் தொடங்கி நெட்டிசன்கள் பலரும் ரீல்ஸ் செய்து பதிவேற்றி வருகின்றனர்.
10,000 மின்சார பேருந்துகளை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மேலும், காவலா பாடல் அதன் கவர்ச்சியான நடன அசைவு மற்றும் இசைக்காக இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. உலகம் முழுவதும் தமன்னாவின் ஹூஜ் ஸ்டெப்புக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் பலரும் பதிவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில், காவாலா பாடலுக்கு இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி நடனமாடி அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜப்பானை சேர்ந்த பிரபல யூடியூபரான மாயோ சன் என்பவருடன் இணைந்து இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி காவாலா பாடலுக்கு நடனமாடி பதிவேற்றியுள்ளார். அதில், ‘ரஜினிகாந்த் மீதான என் அன்பு தொடர்கிறது’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஜப்பானில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமான அரசிகர்கள் இருக்கும் நிலையில், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகியின் காவாலா டான்ஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
