ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில், குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 150 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்தில் 3 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில், Narwal பகுதியில், மியான்மரிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஏராளமானோர் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனர். நேற்று நள்ளிரவில் இப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 150 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

இச்சம்பவத்தில், குடிசைவாசிகளின் அனைத்து உடமைகளும் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தில் 3 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 6 பேர் தீக்‍காயங்களுடன் மீட்கப்பட்டு ஜம்மு மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். தீவிபத்துக்‍கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.