delhi: jama masjid: naveen jindal :இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர்ள் நுபர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்யக் கோரி டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதி முன் மிகப்பெரிய அளவில் முஸ்லி்ம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
delhi: jama masjid: naveen jindal : nupur sharma: இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர்ள் நுபர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்யக் கோரி டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா மசூதி முன் மிகப்பெரிய அளவில் முஸ்லி்ம்கள் இன்று ஜூம்மா தொழுகை முடிந்ததும் போராட்டம் நடத்தினர்
டெல்லி மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தின் ஷஹரான்பூரிலும் இதேபோன்று முஸ்லிம்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு போராட்டம் நடத்தினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக செய்தித்தொடர்பாளர்கள் நுபுல் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, இருவரையும் சஸ்பெண்ட் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தால் அதிருப்தியும், வேதனையும் அடைந்த முஸ்லிம் நாடுகள் இந்தியத் தூதர்களை அழைத்து கண்டனத்தையும், அதிருப்தியையும் பதிவு செய்தன.
இந்நிலையில் ஜும்மா மசூதி முன் தொழுகை முடிந்தபின் ஏராளமான முஸ்லிம்கள் கூடி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
இதுகுறித்து டெல்லி ஜூம்மா மசூதியின் ஷாகி இமாம் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ யார் போராட்டம் நடத்துகிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. மசூதி சார்பில் போராட்டம் நடத்தவும் அழைப்புவிடுக்கவி்லலை. ஒவைசி கட்சியினர்போராட்டம் நடத்தலாம். போராட்டம் நடத்த விரும்பினால் நடத்துங்கள், ஆனால் ஆதரவுதர முடியாது என மசூதி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
டெல்லி போலீஸார் தரப்பில் கூறுகையில் “ டெல்லி ஜூம்மா மசூதி முன் தொழுக்கைக்கு இன்று ஏராளமானோர் வந்தனர். தொழுகைமுடிந்ததும் 300க்கும் மேற்பட்டவர்கள் திடீரென கூடி போராட்டம் நடத்தினர். போலீஸார் விரைந்து சென்று அங்கு கூடியவர்களைக் கலைத்தனர். சூழல் கட்டுக்குள் வந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.
