புளூ கிராஸ் எனப்படும் விலங்குகள் நல வாரியத்தின் தலைவராக உள்ள மேனகா காந்தி குறித்து நம் அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவர் மேனகா.

மத்திய அமைச்சரான இவர், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமாக கருதப்படுபவர். ஜல்லிக்கட்டை கேவலமாக கருதுவதோடு, அவர்களை காட்டு மிராண்டிகள் எனவும் கூறியுள்ளார்.

இந்த அறிவியல் யுகத்திலும் மாட்டை அடக்குவது கலாச்சாரம் என்பது கேவலமாக இருக்கிறது என்றும் மேனகா சொல்லியிருக்கிறார்.

மாட்டை அடக்குவது கலாச்சாரம் இல்லை எனக் கூறும் மேனகா காந்தி நிர்வாண சாமியார் முன்பு கை கட்டி, வாய் பொத்தி பயபக்தியுடன் அமர்ந்திருப்பது மட்டும் எந்த வகை கலாச்சாரம் என பொது மக்கள் கேள்வி எழுப்பினர்.

அது மட்டுமல்ல மாட்டை அடக்குபவர்கள் காட்டுமிராண்டிகள் என்றால் இவரின் செயலை என்ன சொல்வது எனவும் கேட்கின்றனர்.