ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும்,பீட்டாவிற்கு தடை விதிக்க வலியுறுத்திம் கல்லூரி மாணவ, மாணவியர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் பற்றவைத்த இந்த தீ தற்போது கொளுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.
சென்னை, மதுரை, கோவை,திருச்சி, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி என மாணவர்களின் அத்துமீறிய இந்த அமைதிப்போராட்டம் தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளது,

சென்னை மெரினாவில் மாணவர்களும் இளைஞர்களும் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 3 வது நாளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார்.
அவர் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லம் முன்பும் ஏராளமான டெல்லி வாழ் தமிழர்கள் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
