இந்தியாவில் தமிழ்நாடு குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில்  குறிவைத்து விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாதி அமைப்பு கடிதத்தின் மூலம் எச்சரித்துள்ளது.

 

காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து  பல்வேறு தீவிரவாத அமைப்புகள்  இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன. எனவே இந்திய எல்லைகளில் பாதுகாப்பு பலபடுத்தப பட்டுள்ளது.  குஜராத், மற்றும் இலங்கை கடல் மார்கமாக இந்தியாவிற்குள்  தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக வந்த தகவல்களையடுத்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில்  கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஹரியான மாநிலம்  ரொதாக் ரயில்நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சீலிடப்பட்ட உறையில் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தை பிரித்து பார்த்தபோது அதில் அதிரிச்சியூட்டும்  தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

இந்தியாவை ரத்தக்களரியாக்கும் நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும், குறிப்பாக இந்தியாவில் உள்ள முக்கிய 11 ரயில் நிலையங்களை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள  6 கோவில்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என்றும் , தரசா பண்டிகையின் போது அத்தாக்குதல் நடத்துப்படம் என்றும் கூறப்பட்டிருந்தது. ஹரியானா மாநிலம் ரொதாக் ,மற்றும் ரிவாரி ரயில் நிலையங்களிலும், மும்பை நகரின் ஹிஸர், குருஷேத்ராவிலும், அதேபோல் பெங்களூரு, சென்னை, ஜெய்பூர், உள்ளிட்ட இடங்களில்  உள்ள கோவில்களுல் வழிபாடு நிகழ்ச்சிகளின் போது தாக்குதல் நடத்தப்படும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

  

ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்கள் தாக்குதலில் இருந்து தப்பமுடியாது என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக வரும் அக்டோபர் 8 ஆம் தேதி ரிவாரி ரயில் ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்துவது உறுதி என்றும் முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள் என்றும் அதில் சவால் விடப்பட்டுள்ளது.  ஹரியான போலீசார் தேசிய புலனாய்வு பிரிவு அதிகரிகளிடம் அக்கடிதம்  ஒப்படைத்தனர்.  பின்னர் அதிகாரிகள் நடத்திய விராணையில். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷி-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அகமதுவிடம் இருந்து அக்கடிதம் வந்துள்ளதும் இந்தியாவை  அச்சுருத்துவதற்காக இது அனுப்பப்பட்டதும் தெரியவந்துள்ளது.