நான் எதற்கும் கவலைப்படவில்லை. எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே நான் வந்தேன். நான் பர்தா அணிந்திருந்ததால் அவர்கள் என்னை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை.
நான் பர்தா அணிந்திருந்ததால் அவர்கள் என்னை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கூறியதால் நான் அல்லாஹு அக்பர் என்று கத்தினேன் என மாணவி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் உடுப்பி பகுதியில் முஸ்லிம் மாணவிகள் அரசு மகளிர் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வர தொடங்கியது என இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், மாண்டியாவில் உள்ள PES கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது, காவி துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் மாணவியை முற்றுகையிட்டு ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட்டனர். பல ஆண்கள் தன்னை முற்றுகையிட்டு முழக்கமிட்ட போதும் பயமின்றி கல்லூரிக்குள் நுழைந்த அப்பெண் அல்லாஹுஅக்பர் என்று கைகளை உயர்த்த கோஷம் எழுப்பிய படியே வகுப்பறையை நோக்கி முன்னேறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கூட்டத்தின் முழக்கத்துக்கு அச்சப்படாமல் பதில் குரல் கொடுத்த மாணவிக்கு பாராட்டுகள் என பலரும் பதிவிட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரபல தனியார் டி.வி. சேனலுக்கு பேட்டியளித்த மாணவி முஸ்கான்;- நான் எதற்கும் கவலைப்படவில்லை. எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே நான் வந்தேன். நான் பர்தா அணிந்திருந்ததால் அவர்கள் என்னை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கூறியதால் நான் அல்லாஹு அக்பர் என்று கத்தினேன். கல்லூரி பேராசிரியர்கள் என்னை பத்திரமாக அழைத்து சென்றனர். எனது இந்து நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர். காவித் துண்டு அணிந்திருந்தவர்கள் வெளியிலிருந்து வந்திருப்பதாகவும் மாணவி தெரிவித்தனர்.
