நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 151 இடங்களைக் கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. 23 இடங்களைப் பெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

இந்த நிலையில் ஆந்திர சட்டமன்றத்தில் இன்று  மாநிலத்தில் நிலவிவரும் வறட்சி தொடர்பான விவாதத்தில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவது தொடர்பாக தெலுங்கு தேசத்தையும் சந்திரபாபு நாயுடுவையும் கடுமையாகக் குற்றம்சாட்டிப் பேசினார். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க தெலுங்கு தேசம் அரசாங்கம் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை என்று விமர்சித்தார்.

சந்திரபாபு நாயுடு - ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதத்தில் ஆந்திர சட்டப்பேரவையில் கடும் அமளி, ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தனது தகுதியை மீறி செயல்படுவதாக தெலுங்கு தேசம் குற்றச்சாட்டியுள்ளது. 

சந்திரபாபு நாயுடு பேசும் போது, தெலுங்குதேசம் கட்சியை பற்றியும். என்னை பற்றியும் மிகவும் கேவலமாக பேசி வருகிறார். நான் 35 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கிறேன். இப்படி ஒரு அவல நிலையை இதற்கு முன்பு பார்த்ததில்லை. தெலுங்கானாவில் அணைகள் கட்டப்படுவதை கேட்டால், கடந்த முறை நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது கழுதை மேய்த்தீர்களா? என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்கிறார். 

அமைச்சர் ஒருவர் எப்போதும் பிணம் போல இருக்கிறீர்களே என்று சொல்கிறார். வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என முதல்வர் கூறுகிறார். ஆனால் யாருக்கு வழக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை. முதல்வருக்கு எந்தவிதமான ஞானமும் இல்லை. அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறினார். 

இடையில் எழுந்த ஜெகன் மோகன் ரெட்டி; விவசாய கடன் வழங்குவதில் தவறான தகவல்களை கூறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். வெறும் 23 பேர் நீங்க அமளி பண்றீங்களா? நாங்க 150 எழுந்தா என்ன ஆகும் தெரியுமா? ஆகும் என்று தெரியாது என்று ஆவேசமாக பேசியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.