Supreme Court on Demonetisation: தீர்ப்பை மாற்றிச் சொல்லாதீங்க!பணமதிப்பிழப்பு பற்றி காங்கிரஸ் கருத்து

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் செல்லும் என்று கூறுவது தவறானது, மக்களை தவறாக வழிநடத்துவதாகும். தீர்ப்பின் பெரும்பான்மை அம்சங்கள் முடிவைப் பற்றிதான் சொல்கின்றன விளைவுகளை அல்ல என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

It is incorrect to state that the Supreme Court has upheld demonetisation: Congress

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் செல்லும் என்று கூறுவது தவறானது, மக்களை தவறாக வழிநடத்துவதாகும். தீர்ப்பின் பெரும்பான்மை அம்சங்கள் முடிவைப் பற்றிதான் சொல்கின்றன விளைவுகளை அல்ல என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டத்துக்கு உட்பட்டு செய்யப்பட்டதா என்று விசாரிக்க உத்தரவிடக்கோரி 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. நசீர் தலைமையில்,நீதிபதிகள் பிஆர் காவே, ஏஎஸ் போண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.  இதில் 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும், நியாயமான காரணங்கள் உள்ளன என்று தீர்ப்பு அளித்தனர். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

It is incorrect to state that the Supreme Court has upheld demonetisation: Congress

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பெரும்பகுதி எடுக்கப்பட்ட முடிவைப் பற்றித்தான் கூறியுள்ளதேத் தவிர, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகளை பற்றிக் கூறவில்லை.

ஆதலால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை நியாயமானது, செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதாகக் கூறி தவறாக வழி நடத்த வேண்டாம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் அவ்வாறு கூறவில்லை.
பணப்புழக்கத்தைக் குறைத்தல், ரொக்கப்பணமில்லாப் பொருளாதாரம், கள்ளநோட்டுகளைக் குறைத்தல், தீவிரவாதம் கறுப்புப்பணத்தை முடிவுக்கு கொண்டுவருவதல் ஆகிய 4 இலக்குகளில் ஒன்றைக் கூட பணமதிப்பிழப்பு நிறைவேற்றவில்லை, எட்டவில்லை. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பு

ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 26(2) சரியாகப் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை மட்டுமே உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

தீர்ப்பில் அதிகமாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை. ஒரு நீதிபதி தனது மாறுபட்ட கருத்தில், நாடாளுமன்றத்தை புறக்கணித்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் குறித்து எதுவும் கூறவில்லை, இது ஒரு பேரழிவு முடிவு. பொருளாதார வளர்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தி, சிறு,குறு, நடுத்தரத் தொழில்களை முடக்கியது, அமைப்புசாரா துறையை முடித்து, லட்சக்கணக்கான வாழ்வாதாரங்களை அழித்தது. 
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

It is incorrect to state that the Supreme Court has upheld demonetisation: Congress

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “இந்த தீர்ப்பை ஏற்க கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும் பெருமான்மை தீர்ப்பில், பணமதிப்பிழப்பின் நோக்கம் நிறைவேறியதா என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். நோக்கங்கள் எட்டப்பட்டதா என்பது குறித்து தெளிவாக வரையரை செய்யவில்லை. 

It is incorrect to state that the Supreme Court has upheld demonetisation: Congress

16 மாதங்களில் இல்லாதது! டிசம்பரில் வேலையின்மை 8.30 சதவீதமாக அதிகரிப்பு: சிஎம்ஐஇ தகவல்

உண்மையில், பணமதிப்பிழப்பிழப்பு இலக்குகளை அடையவில்லையா என்ற கேள்வியிலிருந்து பெரும்பான்மை நீதிபதிகள் தெளிவாகத் திசைதிருப்பப்பட்டுள்ளனர் ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் சட்ட விரோதம் மற்றும் முறைகேடுகளை சுட்டிக் காட்டியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பணமதிப்பிழப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது மத்திய அரசுக்கு எதிராக சிறி அளவிலான தண்டனை” எனத் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios