Asianet News TamilAsianet News Tamil

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா-எல்1.. சூரியனின் வெளிப்புற பகுதி ஆய்வு - இஸ்ரோ சாதனை

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆன இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.

ISRO Aditya L1 began its journey towards the Sun at 11:50 a.m.
Author
First Published Sep 2, 2023, 11:51 AM IST

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் விஞ்ஞானிகள் குழு வடிவமைத்துள்ளது. இதில், வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி, ஆராய்ச்சி கழகம் ஆகியவை முக்கிய பங்காற்றியுள்ளது.

சூரியனுக்கு அனுப்பப்படும் ஆதித்யா வித்தியாசமானது. இது எந்த ஒரு கிரகத்தையும் சுற்றி அனுப்பப்படவில்லை. பூமி என்ற ஒரு கிரகம் சூரியன் என்ற ஒரு நட்சத்திரம், இரண்டு சேரும் இடத்தில் ஒரு பொசிஷன் உள்ளது. அந்த இடத்தில், பேலன்ஸ் ஆக இருக்கும். அதில் மிக முக்கியமான ஒரு இடம் எல் ஒன் ( L1). பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அந்த இடத்தில் செயற்கை கோள்  அனுப்பும்போது எப்பொழுதுமே, அந்த செயற்கைக்கோள் சூரியனை பார்த்துக் கொண்டிருக்கிற போல் நிலைநிறுத்தப்படும். மற்றொரு புறம் எப்பொழுதும் பூமியை பார்த்தபடி இருக்கும். பூமியில் இருந்து பார்த்தால் குறிப்பிட்ட சில மணி நேரம்தான் சூரியனை பார்க்க முடியும். பூமிக்கு வளிமண்டலம் இருப்பதால், பல கதிர்வீச்சுகள் பூமிக்குள் வருவது கிடையாது. 

ஆனால் ஆதித்யாவில் இருக்கும் ஏழு கதிர்வீச்சு சாதனங்களை வைத்துக்கொண்டு, அனைத்து விதமான கதிர்வீச்சுகளும் இந்த செயற்கைக்கோளால் பார்க்க முடியும். இந்த நிலையில் ஆதித்யா விண்கலம்  சூரியனை நோக்கிய தன் பயணத்தை இன்று காலை 11:50க்கு தொடங்கியது.

15 லட்சம் கி.மீ தொலைவைக் கடந்து L1  இடத்திற்கு 126 நாட்கள் கழித்து வந்தடையும்.  இங்கிருந்து சூரியனைக் கண்காணித்து தகவல் அனுப்பும் வேலையை தொடங்கும். இது தன்னுடன்  7 உபகரணங்களைத் தூக்கிச் செல்கிறது.

2000 Note : உங்களிடம் 2000 ரூபாய் நோட்டு இருக்கா.? உடனே ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை பாருங்க !!

குட் நியூஸ்.. எஃப்டிக்கு 8%க்கும் அதிகமாக வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்.. என்னென்ன தெரியுமா.?

Follow Us:
Download App:
  • android
  • ios