கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த  முகக்கவசம், சர்ஜிகல் மாஸ்க் சானிடைசர் போன்றவை அந்தப் பட்டியலில் இருந்து நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் லீனா நந்தன் கூறுகையில், ‘’அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-பிரிவிலிருந்து இந்த இருபொருட்களும் நீக்கப்படுகிறது. மார்ச் 13-ம் தேதி முதல் 100 நாட்களுக்கும் மேலாக சானிடைசர், முகக்கவசம் ஆகியவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. தேவையான அளவு தற்போது இரு பொருட்களும் மக்களுக்கு கிடைக்கின்றன.

ஆதலால், இந்த பட்டியலில் மேலும் நீட்டிப்போவதில்லை என்பதால் நீக்கப்படுகின்றன. இந்த முடிவு மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின்புதான் எடுக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் முகக்கவசம் போதுமான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. சானிடைசர் இருக்கிறது என்று தெரியவந்தபின்புதான் இந்த உத்தரவுபிறப்பிக்ப்பட்டது” என அவர் கூறியுள்ளார்.