ஐஆர்சிடிசி செயலி மூலம்‌ ஆன்லைனில்‌ பயனாளர்கள்‌ இனி தற்போது முன்பதிவு செய்யும்‌ எண்ணிக்கையைப்‌ போல்‌ இரு மடங்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்‌ என இந்திய‌ ரயில்வே அறிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி செயலி மூலம்‌ ஆன்லைனில்‌ பயனாளர்கள்‌ இனி தற்போது முன்பதிவு செய்யும்‌ எண்ணிக்கையைப்‌ போல்‌ இரு மடங்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்‌ என இந்திய‌ ரயில்வே அறிவித்துள்ளது.இதுக்குறித்து இந்தியன்‌ ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலமாக ஆதார் எண்ணை இணைக்காமல், பயனர் அடையாளத்தை பயன்படுத்தி அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 6 டிக்கெட்டுகள்‌ முன்பதிவு செய்து கொள்ளலாம்‌. ஆனால் இனி இந்த புதிய அறிவிப்பின்படி 12 ஆக உயர்ந்துள்ளது.

ஆதார்‌ அட்டையை இணைத்துள்ளப்‌ பயனாளர்கள்‌ இதுவரை ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள்‌ முன்பதிவு செய்து கொள்ளலாம்‌ என்ற வசதி இருந்தது. இனி ஆதார்‌ அட்டையினை இணைத்துள்ள பயனாளர்கள்‌ தற்போது முன்பதிவு செய்யும்‌ டிக்கெட்டுகளின்‌ எண்ணிக்கையைக்‌ காட்டிலும்‌ இருமடங்கு அதிகமாக, அதாவது மாதத்திற்கு அதிகபட்சமாக 24 டிக்கெட்டுகள்‌ முன்பதிவு செய்து
கொள்ளலாம்‌.

இந்த சேவையைப்‌ பெற இரண்டு நிபந்தனைகள்‌ உள்ளன. டிக்கெட்‌ முன்பதிவு செய்பவரின்‌ ஐஆர்சிடிசி கணக்குடன்‌ ஆதார்‌ இணைக்கப்பட்டிருக்க வேண்டும்‌. யாருக்காக டிக்கெட்‌ முன்பதிவு செய்கிறார்களோ அவர்களில்‌ ஒருவரது ஆதார்‌ அட்டை பரிசோதிக்கப்படும். பயணிகளின் நலனுக்காக இந்த எண்ணிக்கையை இந்தியன் ரயில்வே தற்போது உயர்த்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூபாய் நோட்டுக்களில் அப்துல் கலாம் படம்... ரிசர்வ் வங்கி தீவிர பரிசீலனை..!