முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

  

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிபிஐ காவலை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிபிஐ காவலை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்.  

மேலும், காவலை எதிர்த்து கீழ் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். நீதிமன்ற நடைமுறைகளை ப.சிதம்பரம் தரப்பு முறையாக பின்பற்றவில்லை.
ப.சிதம்பரத்தின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. நீதிமன்ற நடைமுறையில் ப.சிதம்பரத்துக்கு சாதகமாக உத்தரவிட்டால் அது தவறான
முன்னுதாரணமாகிவிடும் என்று சிபிஐ தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.