investigation starting today in babri masji case

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது ரேபர்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து மேற்கண்ட 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை அலகபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதைதொடர்ந்து சிபிஐ, இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் நேற்று முன்தினம் தொடங்கியது. 

அப்போது, ராம் விலாஸ் வேதாந்தி சம்பத் ராய் , பைகுந்த் லால் ஷர்மா மகந்த் நிரித்யா கோபால் தாஸ் தரம்தாஸ் மகாராஜ் ஆகிய 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் நேரில் ஆஜராகினர். 

6வது குற்றவாளியான சதிஷ் பிரதான் ஆஜராகவில்லை. நேரில் ஆஜரான 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களுக்கும் நீதிபதி எஸ்.கே.யாதவ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.