Introducing new world-class luxury trains

ராஜ்தானி, சதாப்தி விரைவு ரயில்களுக்கு மாற்றாக ரயில் 18 மற்றும் ரயில் 20 என்ற புதிய ரயில்களை, இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. இது உலக தரத்திலான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்தியன் ரயில்வே அதன் சேவையை மேலும் நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது இயங்கி வரும் ராஜ்தானி விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில்களுக்கு மாற்றாக ரயில் 18 மற்றும் ரயில் 20 ஆகிய புதிய ரயில்களை அறிமுகப்படுத்த உள்ளது.

ரயில் 18-ல் 16 குளிர்சாதன வசதியுடன் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். முதல் வகுப்பு பெட்டிகள் 2-ம், 14 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட உள்ளது. இதில் வைபை வசதி இடம்பெற்றிருக்கும். 

பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் டிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ரயிலில் பயோ டெக்னாலஜி முறையில் டாய்லெட்டுகள் அமைக்கப்படுகின்றன. 160 கி.மீ. வேகத்தில் செல்வதால் பயண நேரம் 20 சதவீத அளவுக்கு குறையும். 

விமான சக்கரங்கள் தானாக வெளிவருவது போலவே இந்த ரயிலின் படிகளும், ரயில் நிலையம் வரும்போது தானாக வெளிவரும். பின்னர், ரயில் புறப்படும்போது உள்ளே சென்று விடும். ரயில் 18-ன் பெட்டிகள் எவர்சில்வரால் உருவாக்கப்பட்டிருக்கும். ரயில் 20-ன் பெட்டிகள் அலுமினிய தகடுகளால் செய்ப்பட்டிருக்கும். 

வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், இந்த 2 ரயில்களின் பெட்டிகளுமே சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.