Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. சர்வதேச விமானங்களுக்கு பிப்ரவரி 28-ந் தேதி வரை தடை நீட்டித்து உத்தரவு..

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டிருக்கிறது.

International flights will be banned until February 28
Author
india, First Published Jan 19, 2022, 2:38 PM IST

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாத இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பேருந்து, ரயில், விமானம் உட்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. எனினும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வசதியாக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில், கடுமையான கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பொது முடக்ககட்டுப்பாடுகள் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. எனினும், சர்வதேச விமான சேவை மட்டும் இன்னமும் தொடங்கப்படாமல் இருந்தது. அதனை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென ஒமைக்ரான் பரவியதால் மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டிருக்கிறது.கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு தடை இல்லை எனவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதனிடையே இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. எனினும், கடந்த இரு நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு சற்று குறைந்ததால் 3-வது அலை குறையத் தொடங்கியதாக பலரும் எண்ண ஆரம்பித்தனர். ஆனால், மத்திய அரசும், தமிழக அரசும் பொங்கல் மற்றும் மகர சங்ராந்தி விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறிவந்தனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,82,970 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி நிலவரப்படி , தினசரி பாதிப்பு 2.71 லட்சமாகவும், 16-ம் தேதி 2.58 லட்சமாகவும், நேற்று முன்தினம் 2.38 லட்சமாகவும் குறைந்திருந்தநிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 18 சதவீதம் உயர்ந்துள்ளது. 3-வது அலையில், இதுவரை இல்லாத அளவில் நேற்றைய பாதிப்பு உச்சத்துக்கு சென்றுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios