சமீபத்தில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில், 3 தொகுதிகளில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. மிசோரம் மற்றும் தெலங்கானாவில் மாநில கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜ அரசு படுதோல்வி அடைந்தது.

இதைதொடர்ந்து தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், அந்த மாநிலத்தில் ஆட்சி அமைத்தார். மேலும், தனது கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதன்படி, கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடன் இருக்கும் முகம்மது மமூது அலிக்கு உள்துறை அமைச்சக பொறுப்பை வழங்கினார்.

சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, மொத்தமுள்ள 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் 2வது முறையாக முதல்வராக அவர் பதவியேற்றார்.

அதேமேடையில், முகம்மது மமூது அலி(66) மட்டுமே அமைச்சராக பதவியேற்று கொண்டார். இவருக்கு உள்துறை அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

.

தெலுங்கானா தனி மாநில போராட்டம் துவங்கியது முதல் சந்திரசேகர ராவுடன் முகம்மது இருந்து வருகிறார்.. தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சந்திரசேகரராவ் முதல்வரான பிறகு முகம்மது வருவாய் துறை அமைச்சர் மற்றும்  துணை முதல்வர் பதவியும் பெற்றார். இதில், மற்றொரு துணை முதல்வராக தலித் இன தலைவரான கடியம் ஸ்ரீஹரி நியமிக்கப்பட்டார்.
எத்தனையோ பேர் கட்சியில் இருந்தாலும் முகம்மது மீது சந்திரசேகர ராவுக்கு பாசம் அதிகம்.  இதற்கு காரணம், அவர் முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது தான் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. சந்திரசேகர ராவுக்கு மிக நெருக்கமான அனைத்து இந்திய மஸ்ஜித் இ லித்கதுல் முஸ்லிமீன் கட்சியின் ஆதரவு காரணமாகவே ஐதராபாத்தில் உள்ள 8 தொகுதிகளில் சந்திரசேகர் கட்சி வென்றுள்ளது.

பல்வேறு முஸ்லீம் இயக்கங்களும் டிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவு அளித்ததால் தான் 88 இடங்களில் அக்கட்சியால் வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முஸ்லிம் தலைவரான ஷகீல் அமீர் மீண்டும் வெற்றி பெற்றாலும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. பல முஸ்லீம் அமைப்புகளை திருப்திப்படுத்தவும், அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெறுவதற்காகவுமே அமைச்சரவை இலாக்கா ஒதுக்கீடு குறித்து முடிவு செய்வதற்கு முன் முகம்மதுக்கு உள்துறையை ஒதுக்கியதாக கட்சி அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.