பிரதமர் மோடியின் செல்லாக்காசு அறிவிப்பை தொடர்ந்து, பணப்பற்றாக்குறை கடுமையாக எழுந்துள்ளதை அடுத்து, இன்சூரன்ஸ் ப்ரிமீயம் செலுத்த கூடுதலாக 30 அவகாசம் காப்பீடுதாரர்களுக்குவழங்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் கடந்த 8-ந்தேதி முதல் ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு ஒருநபர் ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில் எழுந்துள்ள கடும் பணப்பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, ஆயுள்காப்பீடு நிறுவனக் குழு காப்பீடு தாரர்கள் ப்ரீமியம் தொகை செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்க இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம்(ஐ.ஆர்.டி.ஏ.) கோரிக்கை விடுத்து இருந்தது.

இதையடுத்து, அனைத்து வகையான காப்பீடு தாரர்களும் நவம்பர் 8ந் தேதி முதல் டிசம்பர் 31ந்தேதி வரையிலான ப்ரீமியத் தொகையை செலுத்த கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் அளித்து ஐ.ஆர்.டி.ஏ. உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து காப்பீடு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
ஆதலால், இந்த இரு மாத இடைவெளியில் பணப்பற்றாக்குறையால் இன்சூரன்ஸ் ப்ரீமியம் கட்ட முடியாத நபர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு கூடுதலாக 30ந்தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கார், வீடு, விவசாயம் உள்ளிட்ட கடன்களைப் பெற்றவர்கள் தங்களின் தவனைகளைச் செலுத்த 60 நாட்கள் அவகாசம் அளித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
