அவர்களின் உள்ளாடை காவி நிறத்தால் ஆனது. அவர்களின் உள்ளாடை காவி நிறம் கொண்டு இருப்பதால் அவர்கள் எளிதில் கோபம் அடைந்து விடுகின்றனர்.
கேரளா பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் யாஹியா தாங்கல் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உள்ளாடை காவி நிறம் கொண்டது என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
ஆலப்புழாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய யாஹியா தாங்கல், “நீதிபதிகள் தற்போது எல்லாவற்றுக்கும் அதிரச்சி அடைகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் எங்களின் ஆலப்புழா கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்களை கேட்டாலே அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். ஏன் அவர்கள் அதிரச்சி அடைகின்றனர் என தெரியுமா? ஏன் என்றால் அவர்களின் உள்ளாடை காவி நிறத்தால் ஆனது. அவர்களின் உள்ளாடை காவி நிறம் கொண்டு இருப்பதால் அவர்கள் எளிதில் கோபம் அடைந்து விடுகின்றனர். உங்களுக்கு எரிச்சல் ஆகும், அது உங்களை தொந்தரவும் செய்யும்,” என பேசி இருந்தார்.
இறுதி சடங்கு:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆலப்புழாவில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. வைரல் வீடியோவில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களை சேர்ந்தவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அதில், “இந்துக்கள் உங்களின் இறுதி சடங்கிற்கான அரிசியை மிச்சம் வைத்துக் கொள்ளுங்கள், கிறிஸ்துவர்கள் உங்கள் இறுதி சடங்கிற்கான ஊதுபத்தியை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒழக்கமாக இருந்தால் நம் நிலத்தில் நீங்கள் வாழலாம், ஒழுக்கமாக வாழவில்லை என்றால், எங்களுக்கு அசாதி தெரியும். ஒழுக்கமாக வாழுங்கள், ஒழுக்கமாக, ஒழுக்கமாக.” என கூறினர்.

நீதிமன்றம் உத்தரவு:
ஆலப்புழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மே 21 ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட்டது. ஆலப்புழா கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கோஷம் எழுப்பிய விவகாரம் தொடர்பாக கேரளா மாநில போலீசார் 18 பேரை கைது செய்தனர். சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் முகமது பஷீர் ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். இவர் தனது கட்சி ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
