Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் மொத்த GDP.. அதில் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு மட்டும் 10 சதவிகிதமாம் - ரிப்போர்ட் இதோ!

Ambani Family : பார்க்லேஸ்-ஹுருன் இந்தியாவின் சர்வேபடி, அதிக சொத்து உள்ள குடும்பத்தின் பட்டியலில் அம்பானி குடும்பம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

indians total GDP ambani famil wealth equals to 10 percent says survey ans
Author
First Published Aug 9, 2024, 11:11 PM IST | Last Updated Aug 9, 2024, 11:11 PM IST

சுமார் 25.75 டிரில்லியன் மதிப்பிலான சொத்துக்களுடன், பிரபல பார்க்லேஸ்-ஹுருன் இந்தியாவின் ஆய்வின்படி, அதிக சொத்து உள்ள குடும்பமாக மாறியுள்ளது அம்பானியின் குடும்பம். மேலும் அவர்களுடைய அந்த 25.75 டிரில்லியன் அளவிலான சொத்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பத்தில் ஒரு பங்கிற்குச் சமமானதாகும் என்று 2024 பார்க்லேஸ்-ஹுருன் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 20, 2024 நிலவரப்படி உள்ள நிறுவனங்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தான் இந்த தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்களை கணக்கிடும்போது வரும் குழப்பங்களை தவிர்க்க, அந்த நிறுவனங்களின் தனியார் முதலீடுகள் மற்றும் திரவ சொத்துக்களை விலக்கி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் ரிலையன்ஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்கள், ரிலையன்ஸ் ரீடெய்ல் போன்றவற்றின் பங்கும் அடங்கும்.

மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.1 கோடி கிடைக்கும்.. அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

அம்பானி குடும்பத்தை தொடர்ந்து பஜாஜ் குடும்பம் ரூ.7.13 டிரில்லியன் மதிப்பீட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. புனேவை தளமாகக் கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் குழுமம், அதன் மூன்றாம் தலைமுறைத் தலைவரான நிராஜ் பஜாஜ் என்பவரால் தலைமை தாங்கப்படுவதாக வெளியான அறிக்கை கூறுகிறது. 

அதே போல நான்காம் தலைமுறை குமார் மங்கலம் பிர்லா தலைமையிலான பிர்லா குடும்பம் ரூ. 5.39 டிரில்லியன் மதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த முதல் மூன்று இடங்களில் உள்ள குடும்ப வணிகங்களின் நலன்கள், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமான $460 பில்லியன் மதிப்புடையவை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவின் டாப் 10 பணக்கார குடும்பங்கள் : யார் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios