ட்ரம்ப் இந்தியாவிடம் அனுசரனையாக பேசியுள்ள நிலையில் , இராணுவத்தை தொடர்ந்து எல்லையில் இந்திய போர் விமானங்களுக் தயார் என விமானப்படை தளபதி தனோவத் தெரிவித்துள்ளார், பாகிஸ்தான்  தன் படைகளை எல்லையில் குவித்து வரும் நிலையில் இந்தியா அதை வேடிக்கை பார்காது எனவும் கூறிய அவர். எல்லையில்  இந்திய போர் விமானங்கள் தயாராக நிற்கிறது என்றார்.

காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக்க  பாகிஸ்தான் எடுத்த முயற்ச்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. சீனாவோ தன்னால் ஆன உதவிகளை செய்துவிட்டு பாக்கிடம் இருந்து ஓரங்கட்டிக்கொண்ட நிலையில். இந்த விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்பை அழைத்திருந்தார் இம்ரான்கான், ஆனால் அவரோ இதில் அமெரிக்கா தலையிடுவது சரியாக இருக்காது, பிராந்திய பிரச்சனை என்பதால் நீங்களே இந்தியாவிடம் சூதானமாக பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளுங்கள்  என்று அட்வைஸ் செய்துவிட்டு  கைகழுவிக்கொண்டார்.  இதனால் இந்தியாவை ஒன்றும் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தான்,இந்தியாவை  அடுத்து என்ன செய்யலாம், யாரை வைத்து பேசலாம்  என்று யோசித்து வருகிறது. இதே நேரத்தில் இந்திய எல்லையில் திவிரவாத இயக்கங்களுடன் கையோர்த்துக்கொண்டு இந்திய ராணுவ துருப்புகளின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்திய இராணுவமும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு பதில் சொல்லி வருகிறது.  

இந்த நிலையில் நேற்று பிரமருடன் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் மிகவும் அனுசரனையாக பேசியுள்ளார், இரு நாட்டு தலைவர்களும் கூடி பேசி பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்வது மற்றும், வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பகவும் அவரது உரையாடல்  அமைந்திருந்தது. ஆகமொத்தத்தில் காஷ்மீர் விவகாரத்தில் சீனா, பாகிஸ்தானை தவிற அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கே ஆதரவாக முடிவெடுத்துள்ளனர். என்பது தெளிவாகிறது. இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து ரூட்டுகளும் கிளியர் என்ற நிலைக்க வந்துள்ளஇந்தியா, 

இனி பாகிஸ்தானை பக்குவமாக கவனிக்க திட்டமிட்டுள்ளது, இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை தளபதி தன்னோவா, பாகிஸ்தான் எந்த அத்துமீறலில் ஈடுபட்டாலும் உடனே தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எல்லையில் இராணுவத்தை குவித்துவருவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தான் என்ன வேண்டுமானால் செய்து கொள்ளட்டும்  அத்துமீறினால் இந்திய விமானப்படை யார் என்பதை பார்க்க நேரிடும் என்றார்.இப்போது மட்டுமல்ல எப்போதுமே எல்லையில் விமானப்படை தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார். ஏற்கனவே எந்த வகையில் போரை நடத்தினாலும் இந்தியா அதை எதிர்கொள்ளும் என்றும் பாகிஸ்தான் போர் நடத்தாமல் இருப்பது இவர்களுக்கு நல்லது என்றும் இந்திய இராணுல தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்த நிலையில் விமானப்படை தளபதியின் கருத்து இந்தியா பாகிஸ்தானை பதம்பார்க்க தயாராகிவிட்டது என்பதை காட்டுகிறது.