Asianet News TamilAsianet News Tamil

அஃப்ரிடியின் சர்ச்சை டுவீட்.. கொதித்தெழுந்த இந்திய புலிகள்!! கபில் தேவ், கோலி, ரெய்னா, கம்பீர் பதிலடி

indian players retaliation to afridi controversial tweet about kashmir
indian players retaliation to afridi controversial tweet about kashmir
Author
First Published Apr 5, 2018, 3:08 PM IST

இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் ஐநா தலையிட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடிக்கு கோலி, கம்பீர், ரெய்னா ஆகிய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஷாகித் அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியா ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்து வருகின்றன. சுதந்திரம் கோரி போராடும் அப்பாவி மக்கள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஐநா தலையிட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை  நிறுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

Appalling and worrisome situation ongoing in the Indian Occupied Kashmir.Innocents being shot down by oppressive regime to clamp voice of self determination & independence. Wonder where is the @UN & other int bodies & why aren't they making efforts to stop this bloodshed?
— Shahid Afridi (@SAfridiOfficial) April 3, 2018

ஷாகித் அஃப்ரிடியின் டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு இந்தியர்கள் பலரும் பதிலடி கொடுத்துவருகின்றனர். அஃப்ரிடியின் டுவீட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், தற்போதைய கேப்டன் விராட் கோலி, கம்பீர், ரெய்னா ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.

அஃப்ரிடியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கபில் தேவ், அஃப்ரிடிக்கெல்லாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? யார் அவர்? இது போன்ற நபர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரக்கூடாது என காட்டமாக பதிலளித்தார்.

இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, ஒரு இந்தியராக நம் நாட்டுக்கு எது சிறந்ததோ அது குறித்துச் சொல்லலாம். என்னுடைய நலன்கள் எப்போதும் நாட்டின் நலனை  மையப்படுத்தியே இருக்கும். நாட்டின் நலன்களுக்கு விரோதமான எதையும் நான் ஒருபோதும் ஆதரிக்கமாட்டேன். ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் கருத்துக் கூறக்கூடாது. சிலர்  கூறுகிறார்கள் என கோலி தெரிவித்துள்ளார்.

அஃப்ரிடிக்கு பதிலடி கொடுத்து கம்பீர் டுவீட் செய்துள்ளார். அதில், காஷ்மீர் தொடர்பான அஃப்ரிடியின் டுவிட்டுக்கு ஊடகங்கள் என்னிடம் பதில் கேட்கிறார்கள். இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அஃப்ரிடியின் அதிகாரத்தில் யு.என் என்றால் ”அன்டர் நைண்டீன்” என்று அர்த்தம் புரிந்துள்ளார். இதை ஊடகங்கள் பெரிதாக்க வேண்டாம். அஃப்ரிடியின் பேச்சு நோபாலில் விக்கெட் விழுந்து மகிழ்வதைப் போன்றது என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

Media called me for reaction on @SAfridiOfficial tweet on OUR Kashmir & @UN. What’s there to say? Afridi is only looking for @UN which in his retarded dictionary means “UNDER NINTEEN” his age bracket. Media can relax, @SAfridiOfficial is celebrating a dismissal off a no- ball!!!
— Gautam Gambhir (@GautamGambhir) April 3, 2018

இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இனிமேலும் அப்படித்தான் இருக்கும். என்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த பகுதி, பிறந்த இடம்.

Kashmir is an integral part of India and will remain so always. Kashmir is the pious land where my forefathers were born. I hope @SAfridiOfficial bhai asks Pakistan Army to stop terrorism and proxy war in our Kashmir. We want peace, not bloodshed and violence. 🙏
— Suresh Raina (@ImRaina) April 4, 2018

அதனால், காஷ்மீர் பகுதிக்குள் தீவிரவாத செயல்களை தூண்டிவிடாமல், அத்துமீறி தாக்குதல் நடத்தாமல் இருக்க அஃப்ரிடி தங்கள் நாட்டு ராணுவத்தை கேட்டுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு தேவை அமைதி. ரத்தம் சிந்துவதும், வன்முறையும் அல்ல என கடும் கோபத்துடன் பதிலளித்துள்ளார்.

Follow Us:
Download App:
• android
• ios