இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் சூழ்நிலையில் இந்திய ராணுவத்திடம் 10 நாட்களுக்கு தேவையான வெடி மருந்து மட்டுமே கையிருப்பில் உள்ளதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்திய இராணுவம் சிக்கிம் எல்லையில் சீன இராணுவத்துடன் நீண்ட காலமாக  பிரச்சினையில் உள்ளது. அதுபோல் இந்தியா பாகிஸ்தான் எல்லையிலும்  பதற்றம் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சிஏஜியின்  அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்  இந்திய ராணுவத்தில் வெடிமருந்து தட்டுப்பாடு உள்ளது என சுட்டி காட்டப்பட்டுள்ளது. 

ராணுவ  தொழிற்சாலை வாரியத்தின் செயல்திறனில் குறைபாடுகளைக் கண்டறிந்துள்ள சிஏஜி  கடந்த  2013 இல் இருந்ததை போல் அதன் தொழிற்சாலைகளின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளது. 

பீரங்கி மற்றும் டாங்கி  வெடிமருந்துகளில் இரண்டு முக்கியமான பற்றாக்குறையை சுட்டிக் காட்டியுள்ள சிஏஜி, கடந்த செப்டம்பர் 2016 ல் வெடிமருந்துகள் கிடைப்பதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணப்படவில்லை என்றும் 55 சதவீத வெடிமருந்துகள் மட்டுமே கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது, செயல்பாட்டுத் தயார் நிலையில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தடையற்ற தேவை மற்றும் 40 சதவீத வெடிமருந்துகள் முக்கியமான நிலையில் உள்ளன, 10 நாட்களுக்குள் குறைவான இது உள்ளது, என சிஏஜி அறிக்கை குறிப்பிட்டு உள்ளது. சிஏஜியின் இந்த அறிக்கை  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.