அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி நுழைவு தேர்வு... அறிவித்தது இந்திய ராணுவம்!!

அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. 

Indian Army has announced the entrance exam for the posts of Agni soldiers

அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தின் முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வந்தது. இவற்றை முடித்த பிறகே எழுத்து தேர்வு எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: காரின் குறுக்கே வந்த நாய்.. 70 கி.மீ தூரம்! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ !!

இந்த நிலையில் இனி முதலில் எழுத்து தேர்வு நடத்த ராணுவம் முடிவு செய்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களில் ராணுவம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதுக்குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இனிமேல் பொதுவான ஆன்லைன் பொது நுழைவுத்தேர்வு முதலில் நடத்தப்படும்.

இதையும் படிங்க: சீனாவின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

இதில் வெற்றி பெறுகிறவர்களுக்கு உடல் தகுதித் ர்வும், மருத்துவ பரிசோதனைகளும் நடக்கும். இது தேர்வு நடைமுறைகளை எளிதாக்க உதவும். மேலும் வீரர்களின் அறிவாற்றல் அம்சத்தில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்யும். மேலும் ஆட்சேர்ப்பு முகாம்களில் காணப்படும் அதிக கூட்டத்தை குறைத்து, எளிதாக கையாளக்கூடியதாகவும் மாற்றும் என்று தெரிவித்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios